மேலும் செய்திகள்
காட்டு யானை தாக்கி விவசாயி பலி
04-Aug-2024
ராசிபுரம், ஆக. 30-ராசிபுரம் அருகே, மருத்துவமனைக்கு டூவீலரில் சென்ற தொழிலாளி, பனை மரத்தில் மோதி பலியானார். ராசிபுரம் அடுத்த, குருசாமிபாளையம் கிழக்கு போயர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் நாகராஜ், 44, கூலித்தொழிலாளி. இவருக்கு சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று மதியம், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். கவுண்டம்பாளையம் அருகே வரும்போது, மயங்கிய நாகராஜ் சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதினார். இதில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
04-Aug-2024