உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை ஐயப்பன் கோவிலில் 11ம் ஆண்டு மண்டல பூஜை

குளித்தலை ஐயப்பன் கோவிலில் 11ம் ஆண்டு மண்டல பூஜை

குளித்தலை: குளித்தலை, பஜனைமடம் தெருவில் ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு, மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. ஐயப்பன் உற்சவர் மற்றும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்-பெருமான் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன், வண்ணமிகு திருத்தேர்களில் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பொய்க்கால் குதிரை ஆட்டம், காளையாட்டம், கட்டைக்கால், காவடி ஆட்டம் மற்றும் சிறுவர் சிறுமியர் சிலம்பாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திருவீதி உலா நடந்தது.வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !