உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 13,181 பேருக்கு மருத்துவ பரிசோதனை

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 13,181 பேருக்கு மருத்துவ பரிசோதனை

கரூர்: கரூர் அருகே, புலியூர் கவுண்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் முகாமை பார்வையிட்டார்.அப்போது அவர், கூறியதாவது:மருத்துவ முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பேறுகால மருத்துவம், குழந்தைகள் நலம், நீர-ழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவம், தோல், கண் சிறப்பு மருத்-துவம் உள்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகி-றது. முகாமில் அனைத்து சிகிச்சைகளும் பரிசோதனைகளும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதுவரை, 4,983 ஆண்கள், 8,056 பெண்கள் உள்ளிட்ட மொத்தம், 13,181 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) செழியன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை