டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு 18,030 தேர்வர்கள் பங்கேற்பு
கரூர், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் மாவட்டத்தில், 18,030 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர், என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கைகரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப், 4 தேர்வு வரும், 12ல், 65 தேர்வு மையங்களில் நடக்கிறது. இதில், 18,030 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் இருக்கை வசதி, சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, வெளிச்சம் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, தேர்வுக் கூடங்களுக்கு செல்ல பஸ் வசதி போன்றவை மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தேர்வர்கள் மட்டுமே, மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.தேர்வர்கள் தேர்வு நாளன்று காலை, 9:00 மணிக்கு மேல் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். போட்டோ அடையாளத்திற்காக, ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பென்சில், அழிப்பான்கள், மொபைல், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.