உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின் மோட்டார் திருட முயன்ற 2 பேர் கைது

மின் மோட்டார் திருட முயன்ற 2 பேர் கைது

கரூர், வெள்ளியணை அருகே, விவசாய தோட்டத்தில் மின் மோட்டாரை திருட முயன்ற, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை ஏமூர் சீத்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 25; இவரது விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த, மின் மோட்டாரை நேற்று முன்தினம் கரூர் மூக்காணங்குறிச்சியை சேர்ந்த சபரிநாதன், 19, தரண், 19, ஆகியோர் திருட முயன்றனர். இதுகுறித்து, நந்தகுமார் அளித்த புகாரின்படி சபரிநாதன், தரண் ஆகிய இரண்டு பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை