மேலும் செய்திகள்
பைக் திருடன் கைது
23-Dec-2024
அரசு மருத்துவ கல்லுாரியில்டூவீலர் திருடிய 2 பேர் கைதுகரூர், ஜன. 7-கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமன், 26; இவர் கடந்த, 5 ல் கரூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ஸ்பிளண்டர் பிளஸ், டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, ராமன் சென்று பார்த்த போது, டூவீலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.அதேபோல், கரூர் தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார்,39, கடந்த, 3 ல் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஸ்பிளண்டர் பிளஸ் டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். அதையும் காணவில்லை. இதுகுறித்து, பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இரண்டு டூவீலர்களையும் நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்த லோகேஷ், 32, பார்த்திபன், 39, ஆகியோர் திருடியது தெரியவந்தது. இரண்டு பேரையும் பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.
23-Dec-2024