உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டாஸ்மாக் பாரில் தகராறு 2 பேர் காயம்; 5 பேர் கைது

டாஸ்மாக் பாரில் தகராறு 2 பேர் காயம்; 5 பேர் கைது

குளித்தலை : குளித்தலை அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், இருவர் காயமடைந்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., வாலாந்துார் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல், 26. இவரது நண்பர் தண்ணீர்பள்ளியை சேர்ந்த கார்த்திகேயன். இருவரும் நேற்று முன்தினம் இரவு குளித்தலை பைபாஸ் சாலையில் உள்ள, டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றனர். அங்கு திம்மாச்சிபுரம் கிராமத்தை சேர்ந்த கிருபானந்தன், 29, மணத்தட்டையை சேர்ந்த வீரமணி, 39, ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்போது சண்முகவேல், கிருபானந்தன் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கிருபானந்தன், வீரமணி, ஜோதிபாசு, 27, பாஸ்கர், 39, சண்முகானந்தன், 23, ஆகியோர் சேர்ந்து சண்முகவேல், கார்த்திகேயன் ஆகியோரை பீர் பாட்டில், இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த சண்முகவேல், கார்த்திகேயன் இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து, குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து, கிருபானந்தன் உள்பட ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை