மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்தஇரண்டு பேர் கைது
23-Apr-2025
கரூர் கரூர் மற்றும் தான்தோன்றிமலையில் கஞ்சா வைத்திருந்ததாக, இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் ஐந்து சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மவுனிஸ்வரன், 20, என்பவரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.அதேபோல், தான்தோன்றிமலை வாஞ்சிநாதன் பகுதியில், கஞ்சா வைத்திருந்த ராயனுார் பகுதியை சேர்ந்த அபிமன்யு, 23, என்பவரை தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., சக்திவேல் கைது செய்தார். இரண்டு பேரிடம் இருந்து, 60 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23-Apr-2025