உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை மறியலில் ஈடுபட முயன்ற 21 சத்துணவு ஊழியர்கள் கைது

சாலை மறியலில் ஈடுபட முயன்ற 21 சத்துணவு ஊழியர்கள் கைது

கரூர், கரூர் அருகே, சாலை மறியலில் ஈடுபட முயன்ற, சத்துணவு ஊழியர் சங்கத்தினர், 21 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஓய்வூதியமாக, 6,751 ரூபாய் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள, 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், ஈட்டிய விடுப்பு, ஈட்டா விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்த, போவதாக அறிவித்திருந்தனர்.அதன்படி, கரூர்-திண்டுக்கல் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன், கரூர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற, 18 பெண்கள் உள்பட, 21 பேரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி