மேலும் செய்திகள்
வெள்ளையம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா
04-Aug-2025
கரூர், கரூர், தான்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண பெருமாள் கோவிலில் வரும், 27ல் பாலாலயம் நடக்கிறது.திருப்பதி சென்று தரிசிக்க முடியாதவர்களும், வயதானவர்களும், தான்தோன்றிமலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம் என்பது, இக்கோவிலின் தனி சிறப்பு. இக்கோவில், 12ம் நுாற்றாண்டை சேர்ந்தது என்றும், குடைவரை கோவில் என்றும் கூறப்படுகிறது. திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிக்க முடியாமல், சோமசன்மா என்ற பக்தன் மிகவும் மனம் வருந்திக் கிடந்தான். அச்சமயத்தில் பக்தனுக்காக, திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாளே இங்கு வந்து தோன்றியதாக ஐதீகம். பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோவில் தான்தோன்றி மலை என்ற பெயர் பெற்றது.இந்த சிறப்பு கோவிலில் வரும், 27 காலை 9:30 முதல் 10:30 மணி வரை கோவில் திருப்பணி தொடங்க பாலாலயம் நடக்கிறது. அன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கவுள்ளது.
04-Aug-2025