மேலும் செய்திகள்
விழுப்புரம் அருகே சேவல் சண்டை
01-Nov-2026
சேவல் சண்டையில் ஈடுபட்ட 3 பேர் கைது
19-Oct-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த, காக்காயம்பட்டி நால்ரோடு அருகே பண்ணைக்களம் பகுதியில், சேவல் சண்டை நடைபெறுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையில், சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டதாக, திருச்சி மாவட்டம், தொட்டியம் பூபதி, 29, ரத்தினவேல், 29, நாதிப்பட்டி காமராஜ், 21, கொசூர் வீரமலை, 30, ஆகியோர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 9 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
01-Nov-2026
19-Oct-2026