மேலும் செய்திகள்
பகவதியம்மனுக்கு சிறப்பு பூஜை
09-Apr-2025
குளித்தலை:குளித்தலை அடுத்த. முள்ளிப்பாடி பஞ்., மாலப்பட்டியில் பிரசித்தி பெற்ற விநாயகர். மாரியம்மன், காளியம்மன், பகவதியம்மன், முத்தாளம்மன், முனியப்பன் மற்றும் மந்தை காத்தான் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம், 48 வது மண்டல பூஜையில் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடந்தன. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
09-Apr-2025