மேலும் செய்திகள்
மனைவி, மகன் மாயம் போலீசில் தந்தை புகார்
26-Oct-2026
குளித்தலை:குளித்தலை அடுத்த லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் பிச்சைமணி, 43; விவசாயி. இவரது மகன் ரிஷிகேசவன், 15, லாலாப்பேட்டை அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணிக்கு வீட்டில் இருந்தார். வயலுக்கு சென்ற பெற்றோர், திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகனை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.* குளித்தலை அடுத்த மனவாசி பஞ்., கோரகுத்தி பகுதியை சேர்ந்தவர் முரளி, 28; கரூர் தனியார் டெக்ஸ் கம்பெனியில், மேலாளர். இவரது மனைவி கீர்த்தனா, 27. இவர்களுக்கு, கடந்த, 2024ல் திருமணமானது. இவர்களுக்கு, ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த, 20ல், முரளி, வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். பின், திருச்சியில் இறப்பு காரியத்துக்காக டூவீலரில் சென்றார். பின், மொபைல் போனில் தொடர்பு கொண்ட முரளி, இரவு, 9:00 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் வரவில்லை. 21 காலை, 10:00 மணிக்கு, 'தனக்கு வாழ பிடிக்கவில்லை; நான் எங்காவது செல்கிறேன்; அம்மா, தம்பி கவுதம் ஆகியோர் பத்திரமாக இருங்கள்' என, இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி கீர்த்தனா அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.* குளித்தலை அடுத்த நல்லுார் பஞ்., ஆத்தாம்பட்டியை சேர்ந்தவர் மகாமுனி, 40; விவசாய தொழிலாளி. இவரது மனைவி கனகவள்ளி, 36. கடந்த, 17 இரவு, இருவரும் துாங்கி சென்றனர். அதிகாலை, 2:00 மணிக்கு பார்த்தபோது, மனைவி கனகவள்ளியை காணவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் காணாமல்போன அன்று, 4 கிராமில் தங்க தோடு, தங்கத்தில் தாலி, வெள்ளி கொலுசு அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கணவர் மகாமுனி அளித்த புகார்படி, நங்கவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.* குளித்தலை அடுத்த ஆர்ச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி, 36; விவசாய தொழிலாளி. இவரது மனைவி நதியா, 27. இவர்களுக்கு, கடந்த, ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, ஆறு வயதில் மகள், இரண்டு வயதில் மகன் உள்ளனர்.கடந்த, 15 காலை, 9:00 மணிக்கு, மாடுகளை ஓட்டிச்சென்று மேய்த்துவிட்டு வருவதாக கூறி சென்றார். மீண்டும், வீட்டுக்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர். * குளித்தலை அடுத்த அரவணம்பேட்டையை சேர்ந்தவர் சுமதி, 39; கே.பி.குளம் பகுதியில் உள்ள கொசுவலை கம்பெனியில், துாய்மை பணியாளர். இவரது மகள் அனிதா, 19, தாய் சுமதியுடன், கம்பெனியில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, மணவாசியில் உள்ள தன் அப்பா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அங்கு செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த தாய் சுமதி, உறவினர்கள் வீட்டில் விசாரித்துள்ளார். எந்த தகவலும் கிடைக்கவில்லை. சுமதி அளித்த புகார்படி, மாயனுார் போலீசார் தேடி வருகின்றனர்.
26-Oct-2026