மேலும் செய்திகள்
தரம் உயரும் எட்டுபோலீஸ் ஸ்டேஷன்கள்
27-Jul-2025
கரூர், கரூர் மாவட்டத்தில், ஐந்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில், எஸ்.ஐ., தலைமையில் இயங்கும் சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டே ஷன்கள் செயல்படுகின்றன. அதில், பல போலீஸ் ஸ்டேஷன்களை, இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், 280 சட்டம்- ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.கரூர் மாவட்டத்தில் வாங்கல், தான்தோன்றிமலை, வெள்ளியணை, சின்னதாராபுரம் மற்றும் தென்னிலை ஆகிய ஐந்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் இயங்கி வருகிறது. தற்போது, ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களும், இன்ஸ்பெக்டர்கள் பணி நியமனம் செய்யும் வகையில், தரம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில், ஐந்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், இன்ஸ்பெக்டர்கள் தனியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் இதுவரை, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, வெள்ளியணை ஆகிய, மூன்று போலீஸ் ஸ்டேஷன்கள் ஒரே இன்ஸ்பெக்டர் தலைமையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
27-Jul-2025