மேலும் செய்திகள்
க.பரமத்தி, அணைப்பாளையத்தில் கனமழை
11-Oct-2025
கரூர்: கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், நேற்று காலை மழை பெய்தது. அதிகபட்சமாக அணைப்பாளையத்தில், 77.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.வடகிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும், குறைந்தழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றதால், தமிழகத்தில், நேற்று முன்தினம் மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் நேற்று காலை, 8:00 மணி வரை விடிய விடிய காற்றுடன் கூடிய மழை பெய்தது.மழை நிலவரம்(மி.மீ.,): அரவக்குறிச்சி, 24, அணைப்பாளையம், 77.40, க.பரமத்தி, 15.80, தோகைமலை, 12.20, கிருஷ்ணராய-புரம், 10.50, கடவூர், 8, மயிலம்பட்டி, 20, பாலவிடுதி, 25 ஆகிய அளவுகளில் மழை பதிவாகி இருந்தது. மாவட்டம் முழு-வதும், 16.17 மி.மீ., பதிவானது.மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, தண்ணீர் வரத்து வினாடிக்கு, 11,502 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 13,383 கன அடி-யாக அதிகரித்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சம்பா சாகுபடிக்காக வினா-டிக்கு, 11,913 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. மேலும், கீழ் கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பா-ளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 8.95 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
11-Oct-2025