மேலும் செய்திகள்
தனியார் பஸ் சிறை பிடிப்பு
30-Nov-2024
கிருஷ்ணராயபுரம், டிச. 21-லாலாப்பேட்டை அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு வேகமாக வந்த தனியார் பஸ் கவிழ்ந்தது.கரூர்-திருச்சி நெடுஞ்சாலை லாலாப்பேட்டை ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணத்தில் இருந்து, கோவை நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று வேகமாக வந்து, சாலையோரம் தடுப்பு பகுதியில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தால், அந்த வழியாக சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இரண்டு மணி நேரம் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.கவிழ்ந்து கிடந்த தனியார் பஸ், கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் சென்றன. விபத்தில் சிக்கிய தனியார் பஸ்சில், எட்டு பேர் மட்டுமே பயணம் செய்தனர். இவர்கள் லேசான காயத்துடன், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
30-Nov-2024