உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

கரூரில் நாய்கள் கடித்து 8 ஆடுகள் பலி

கரூர் கரூர் தான்தோன்றிமலையில், நாய்கள் கடித்ததில், 8 ஆடுகள் பலியானது.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றி மலை, வடக்கு தெருவை சேர்ந்தவர் அமுதா. இவரது கணவர் பழனியப்பன். மாற்றுத்திறனாளி. வீட்டுக்கு அருகில் பட்டி அமைத்து, அமுதா ஆடுகளை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில், தெரு நாய்கள் உள்ளே புகுந்து கடித்து குதறியதில், 8 ஆடுகள் உயிரிழந்தன. இதில் நான்கு சினை ஆடுகளும் அடங்கும்.கால்நடை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகுதான், ஆடுகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று கூறியுள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும், தங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அமுதா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை