உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் அதிரடி கைது

புகையிலை பொருட்கள்விற்றவர் அதிரடி கைதுஅரவக்குறிச்சி, அக். 4-வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதியில், சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வெங்கட் டீ ஸ்டால் என்ற கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கனகராஜ், 68, என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ