மேலும் செய்திகள்
அரசு வேலை தருவதாக ரூ.6.72 லட்சம் மோசடி
06-Aug-2025
ஈரோடு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி, ௪8.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கோபி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோபி, பாரியூர், நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பூபேஷ், 28; இவருக்கு நண்பர் மூலம் கோபி வாய்க்கால்மேடு முனிசிபல் காலனி செந்தில்குமார், 37, பழக்கமானார்.தமிழக அரசில் வேலை வாங்கி தருவதாக செந்தில்குமார் உறுதியளித்ததை நம்பி, 2024 மே முதல் இந்தாண்டு ஜூலை இறுதி வரை, 48.80 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணையாக பூபேஷ் வழங்கி யுள்ளார். அரசு வேலை வாங்கி கொடுக்காததால் பணத்தை திருப்பி தர கேட்டுள்ளார். பணத்தையும் தராமல் இழுத்தடித்தார்.இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். செந்தில்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில் தொடர்புடைய கோவையை சேர்ந்த பிரபு என்பவரை, தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
06-Aug-2025