உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெண்ணை மிரட்டி செயின் பறிக்க முயற்சித்த வாலிபர் தலைமறைவு

பெண்ணை மிரட்டி செயின் பறிக்க முயற்சித்த வாலிபர் தலைமறைவு

குளித்தலை ;குளித்தலை அடுத்த பெரிய பணியூரை சேர்ந்தவர்கள் ஜோதிகா, 25, செந்தில். இவர்கள் இடையே சில மாதங்களுக்கு முன்பு பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்ளது. இந்நிலையில் ஜோதிகா தம்பி லோகநாதன், 'எனது அக்காவிடம் வாங்கிய பணத்தை கொடுக்க வேண்டியது தானே' என கூறி, செந்திலிடம் தகராறு செய்தார்.இந்நிலையில் கடந்த, 4ல் ஜோதிகா காலை 11:00 மணியளவில் பனையூர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வழி மறித்து, செந்தில் ஆதரவாளரான கார்த்திக், 29, என்பவர் மறைத்து வைத்திருந்த நீண்ட வாளை எடுத்து, அவரது கழுத்தில் வைத்து, தங்க செயினை பறிக்க முற்பட்டார். அப்போது ஜோதிகாவின் அலறல் சத்தம் கேட்டு, ஊர் மக்கள் ஓடி வரும் போது, கார்த்திக் கையில் வைத்திருந்த நீண்ட வாளை சுழற்றி அனைவரையும் பயமுறுத்தி அங்கிருந்து தப்பினார்.ஜோதிகா கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் கார்த்திக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை