உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நாளை ஆடிப்பெருக்கு விழா: கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

நாளை ஆடிப்பெருக்கு விழா: கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு

கரூர், ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி கரையோர பகுதி களில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் முக்கிய திருவிழாவான, ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது. இதனால், கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பொது மக்கள், காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் நாளை புனித நீராட உள்ளனர். கரூர் மாவட்டத்தில், காவிரியாறு பகுதிகளான வேலாயுதம்பாளையம், புகழூர், வாங்கல், நெரூர், குளித்தலை மற்றும் மாயனுாரில், ஆடிப்பெருக்கையொட்டி வழக்கமாக குளிப்பது வழக்கம். அதேபோல், அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பெரியாண்டாங்கோவில் தடுப்பணை, கொத்தப்பாளையம் தடுப்பணை, சின்னதாராபுரம், ராஜபுரம் பகுதி யில் பொதுமக்கள் குளிப்பர். இதனால், 300க்கும் மேற்பட்ட போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில், பாதுகாப்பு பணியில் நாளை ஈடுபட உள்ளனர்.கரூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான, காவிரியாற்றின் கரையோரம் பகுதியான நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. நாளை ஆடிப்பெருக்கு விழாவுக்காக, நெரூர் செல்லும் பொதுமக்கள் காவிரியாற்றில் புனித நீராடுவதால், அங்கும் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை