உழவர் சந்தை சாலையில் உடைந்த தடுப்பு சுவர்களால் விபத்து அபாயம்
கரூர், கரூர் உழவர் சந்தை சாலையில், தடுப்பு சுவர்கள் பல இடங்களில், உடைந்த நிலையில் காணப்படுகிறது.கரூர்-திருச்சி சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தை சாலையில் மருத்துவமனைகள், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. இதனால், உழவர் சந்தை சாலையில் வாகன நெரிசல் ஏற்படுவது வழக்கம். இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க உழவர் சந்தை சாலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, சாலையின் நடுவே, தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன. தற்போது, பல இடங்களில் தடுப்பு சுவர்கள் உடைந்துள்ளது. அதை சரி செய்யாமல், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர்.தடுப்பு சுவர்கள் முழுமையாக உடைந்து விடும் பட்சத்தில், வாகனங்கள் தாறுமாறாக செல்லும். அப்போது, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் உழவர் சந்தை சாலையில் உடைந்த தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டியது அவசியம்.