உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கரூர்: ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறை-வேற்றப்பட்டுள்ளது.கரூரில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச் சங்-கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. சங்க தலைவர் சுந்தரகணேசன் தலைமை வகித்தார். கூட்-டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியின்படி ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு கூடுதலாக, 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்-டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்-டத்தில் உள்ள குறைகளை களைய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடி-மக்களுக்கான, ரயில் பயண கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் உள்-ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காத்தமுத்து, ராமசாமி, மாணிக்கம், மாவட்ட செயலர் கோபால், மாவட்ட பொருளாளர் பால-சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ