உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு

அறுவடை பணிக்காக அமராவதி ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு

கரூர்: அமராவதி அணையில் இருந்து, அறுவடை பணிக்காக ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று காலை அதிகரிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் நிலவரப்படி வினாடிக்கு, 57 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 250 கன அடியாக அதிகரித்தது. அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு நேற்று காலை, 8:00 மணிக்கு சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 379 கன அடியில், 474 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 82.35 அடியாக இருந்தது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,517 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, 3,867 கன அடி தண்ணீரும், இரண்டு பாசன வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 24.30 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 74 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை