உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலை அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குளித்தலை அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

குளித்தலை, குளித்தலை, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன், 2ல், சிறப்பு பிரிவான மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், அந்தமான் நிக்கோபர் தமிழ் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், பாதுகாப்பு படை வீரர்களுக்கு கலந்தாய்வு காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது. உரிய சான்றிதழுடன், அனைத்து பாடப்பிரிவுகளிலும் சிறப்பு பிரிவினர் சேர்ந்து பயனடையலாம்.பொது பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன், 4 காலை, 10:00 மணிக்கு இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தாவரவியல் உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு நடக்கிறது. 5ல், பி.காம், பி.பி.ஏ., பிகாம் (சி.ஏ) மற்றும் புதிய பாடப்பிரிவுகளான பி.ஏ., வரலாறு, பி.காம் தமிழ் வழி ஆகியவற்றுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 6ம் தேதி காலை, 10:00 மணிக்கு பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவர்களின் மதிப் பெண், இனசுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ்- 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், இரண்டு போட்டோ, ஆதார் அட்டை மற்றும் விண்ணப்பபடிவ நகல், மேலும் உரிய கட்டணத்துடன் வந்து கல்லுாரியில் சேரலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ