உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தீயணைப்பு வீரர்களுக்கு வானுார்தி ஏணி பயிற்சி

தீயணைப்பு வீரர்களுக்கு வானுார்தி ஏணி பயிற்சி

கரூர், கரூர் அருகே, புதிய தீயணைப்பு துறை வீரர்களுக்கு, வானுார்தி ஏணி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக தீயணைப்பு துறைக்கு சமீபத்தில் புதிதாக, 650 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும், மண்டலம் வாரியாக ஆறு மையங்களில், புதிய தீயணைப்பு வீரர்களுக்கு அடிப்படையிலான, 90 நாள் பயிற்சி முகாம் கடந்த ஏப்ரலில் தொடங்கியது. திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட, 98 புதிய தீயணைப்பு வீரர்களுக்கு, கரூர் அருகே வேட்ட மங்கலத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று கரூர் அருகே தளவாப்பாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், புதிய தீயணைப்பு வீரர்களுக்கு வானுார்தி ஏணி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் மூலம், உயரமான கட்டடங்களில் தீ விபத்து ஏற்படும் போது, தீயை அணைப்பது, பொதுமக்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர்கள் கருணாகரன், திருமுருகன், புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை