உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.52.64 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

ரூ.52.64 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்

கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை சேர்த்து, 52 லட்சத்து 64 ஆயிரத்து, 386 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. 20,598 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 52.15 ரூபாய், அதிகபட்சமாக, 62.89 ரூபாய், சராசரியாக, 61.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 7,318 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 4 லட்சத்து, 44 ஆயிரத்து, 473 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 215.55, அதிகபட்சமாக, 219.69, சராசரியாக, 219.10, இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 164.88, அதிகபட்சமாக, 215.55, சராசரியாக, 201.10 ரூபாய்க்கு ஏலம் போனது. 21,067 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 44 லட்சத்து, 41 ஆயிரத்து 210 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்தில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 185 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 57.65, அதிகபட்சமாக, 72.19, சராசரியாக, 67.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 5,823 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 3 லட்சத்து 78 ஆயிரத்து 703 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், நிலக்கடலை சேர்த்து மொத்தம், 52 லட்சத்து 64 ஆயிரத்து, 386 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ