மாவட்டத்தில் வரும் 14ல் 8 இடத்தில் உழவரை தேடி வேளாண் திட்ட முகாம்
கரூர், கரூர் மாவட்டத்தில், 8 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் வரும், 14ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், 8 இடங்களில் உழவரை தேடி வேளாண்- திட்ட முகாம் வரும், 14ல் நடக்கிறது. கரூர் வட்டாரத்தில் நன்னியூர், வேட்டமங்கலம் (மேற்கு) கிராமத்திலும், தான்தோன்றிமலை வட்டாரத்தில், காக்காவாடி, மேலப்பாளையம் கிராமத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், வெஞ்சமாங்கூடலுார், அஞ்சாகவுண்டன்பட்டி கிராமத்திலும் நடக்கிறது.மேலும் க.பரமத்தி வட்டாரத்தில், கோடந்தார் வடக்கு, தென்னிலை தெற்கு கிராமம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில், கொசூர், சிவாயம் தெற்கு கிராமங்களில் நடக்கிறது. முகாமில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள், செயல் விளக்கம், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசு திட்டங்கள், உயிர்ம வேளாண் சாகுபடி குறித்த வழிகாட்டுதல், உயிர்ம வேளாண் சான்று பெற வழிமுறைகள், வேளாண் விற்பனை, கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பயிர்க்கடன் உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.