உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தேர்தல் பணி குறித்து ஆலோசனை

அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தேர்தல் பணி குறித்து ஆலோசனை

குளித்தலை: குளித்தலை அடுத்த வளையப்பட்டியில், அ.தி.மு.க., கிளை பொறுப்பாளர்கள் பிஎல்ஏ-2 சிறப்பு தீவிர வாக்காளர் பணி மற்றும் தேர்தல் பணி குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு, ஒன்-றிய செயலர் கருணாகரன் தலைமை வகித்தார்.பிஎல்ஏ--2 பொறுப்பாளர்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவல-ருடன் சென்று, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தை முறையாக பூர்த்தி செய்து வழங்கப்படுகிறதா, தி.மு.க.,வினர் தலையீடு உள்ளதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்-பட்டது. வளையப்பட்டி, குமாரமங்கலம், இனுங்கூர், பொய்யா-மணி, பஞ்., பகுதி பொறுப்பாளர்கள், மாஜி யூனியன் கவுன்சி-லர்கள் கலிங்கப்பட்டி ரமேஷ். கல்யாணராமன், பொய்யாமணி பாலன், வளையப்பட்டி ராஜா, மணி, பார்த்திபன் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் பஞ்சபட்டியில் ஒன்றிய செயலர் வக்கீல் இளங்குமரன் தலை-மையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் பாப்பக்காபட்டி, போத்தராவுத்தன்பட்டி, கொசூர், பஞ்சப்-பட்டி, வயலுார், கொமட்டேரி ஆகிய பஞ்., பகுதி பொறுப்பா-ளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ