உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகள், முகவர்கள் கூட்டம்

கரூரில் அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகள், முகவர்கள் கூட்டம்

கரூர், கரூரில், அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி நிர்வாகிகள் மற்றும் முகவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அக்கட்சி மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமை வகித்து பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி, நான்கரை ஆண்டு முடிவடைந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மாநிலத்தின் கடன் மட்டும் அதிகரித்து உள்ளது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தமிழகத்தை தலைக்குனிய விடமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி வருகிறார். தினந்தோறும் தமிழகம் தலைகுனிந்து தான் இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இரவு, 11:00 மணிக்கு அந்த பெண்ணுக்கு, அங்கு என்ன வேலை என தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர்.விலைவாசி உயர்வு, மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர் வரி, நில வழிகாட்டு மதிப்பு, பத்திரப்பதிவு கட்டண ஆகியவற்றை உயர்த்திவிட்டு, உரிமை தொகை, 1,000 ரூபாய் தருகிறேன் என மக்களை ஏமாற்றி வருகின்றனர். காவிரி ஆற்றங்கரையில் இரவு பகல் பாராமல் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னசாமி, மாவட்ட இணை செயலர் மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ