உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அம்மா உணவகம்: மக்கள் எதிர்பார்ப்பு

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அம்மா உணவகம்: மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரியில், அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் நகரின் மையப்பகுதியில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், கொளந்தானுாரில், 300 கோடி ரூபாய் செலவில், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு, 2019ல், அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, பழைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள், உள் நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு புதிய மருத்துவமனை கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. சித்த மருத்துவ பிரிவை தவிர, பல்வேறு மருத்துவ பிரிவுகளும், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.நாள்தோறும் வெளிப்புற நோயாளிகள், 500க்கும் மேற்பட்டவர்கள் வரை வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு, மருத்துவமனை தரப்பில் உணவு வழங்கப்படுகிறது. ஆனால், வெளிப்புற நோயாளிகள், உள் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர் புதிய மருத்துவமனைக்கு செல்லும்போது, குறைந்த செலவில் உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை சுற்றியுள்ள, ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு, உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், அம்மா உணவகம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ