உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கதண்டு கடித்து முதியவர் பலி

கதண்டு கடித்து முதியவர் பலி

குளித்தலை: குளித்தலை அடுத்த சிந்தலவாடி பஞ்., புதுத்தொட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொம்மன், 75. கடந்த, 18 காலை சிந்தலவாடி, குள்ளநரி மேடு முரளி என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு பறந்து வந்த கதண்டு கடித்ததில், பொம்மன் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் அதிகாலை பலியானார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ