அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையாக மாத ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் மகாவிஷ்ணன், தனபாக்கியம், மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, சிங்கராயர், வாசுகி, பழனி, காமாட்சி, கணேசன் உள்பட, பலர் தலையில் கருப்பு துணியில் முக்காடு போட்டு பங்கேற்றனர்.