உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

கரூர்; கரூரில், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள், உதவி-யாளர்கள் சங்கம் சார்பில், பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் ஆறு நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் கலெக்டர் அலுவலகம் முன், ஏழாவது நாளான நேற்று, மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாதேவி தலைமையில், காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், அங்கன்வாடி பணி-யாளர்கள், உதவியாளர்கள் ஒப்பாரி வைத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்-பாட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ