கரூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம்
கரூர், கரூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம் நடந்தது.டி.எஸ்.பி.,அம்புரோஸ் ஜெயராஜா தலைமை வகித்தார். இந்தியா முழுவதும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்., 27 முதல் நவ., 2 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பாலிடெக்னிக் மாணவர்கள் கலந்துகொண்டு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலமாக லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் நிகழ்ச்சியில் லஞ்சம் கொடுப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் விளக்கினர். அதை தொடர்ந்து, லஞ்சம் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதில், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலைய முகவரி மற்றும் மொபைல் 94981 05830 தொலைபேசி எண் 04324 225100 ஆகியவை இடம்பெற்று இருந்தது.நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, சாமிநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.