மேலும் செய்திகள்
போதை பழக்கத்தின் தீமைகள்; விழிப்புணர்வு பேரணி
27-Jun-2025
கரூர், கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, போதைபொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் தங்கவேல் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். திருவள்ளூவர் மைதானம் வரை பேரணி சென்றது. தொடர்ந்து தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரியில், போதை பொருட்களுக்கு எதிரான கருத்தரங்கு நடந்தது. இதில், தன்னார்வ குழுக்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக செயல்படுத்திய, ஆறு குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கரூர் ஆர்.டி.ஓ., முகமதுபைசல், உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) செல்வமணி உள்பட பலர் பங்கேற்றனர்.* குளித்தலை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை (கலால்) சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது, கலால் தனி தாசில்தார் செந்தில் தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் வைரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், அசோகன், மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு எஸ்.ஐ.,ராஜகோகிலா, ஆர்.ஐ.,தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர்.குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். டி.எஸ்.பி.,செந்தில்குமார், ஆசிரியர்கள். வருவாய்த்துறையினர் பங்கேற்றனர்.தோகைமலையில், தனியார் மகளிர் கல்லுாரி மற்றும் அரசு பள்ளிகளில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.* கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ, மாணவியர் பங்கேற்ற போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி, டவுன் பஞ்சாயத்து அலுவலக சாலை, கரூர்- திருச்சி நெடுஞ்சாலை வழியாக சென்றது. போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோஷம் எழுப்பினர்.
27-Jun-2025