தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்
கரூர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது, காலணி வீசப்பட்டதை கண்டித்தும், காலணி வீசிய ராஜேஷ் கிேஷார் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யக்கோரியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட மா.கம்யூ., கட்சி செயலர் ஜோதிபாசு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலர் முத்து செல்வன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் சுப்பிரமணி, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.