கரூர் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமனம்
கரூர், கரூர் மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலின்படி, மாவட்ட துணைத் தலைவர்களாக சுப்பிரமணி, விக்டோரியா வேலுச்சாமி, ராகினி, பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர்களாக சாமிதுரை, செல்வராஜ், உமாதேவி, மாவட்ட செயலாளர்களாக முருகேசன், வெங்கடாச்சலம், ராஜாபிரதீப், காவேரி மோகன்ராஜ், கற்பகவல்லி, பானுப்பிரியா, மாவட்ட பொருளாளராக இளங்கோவன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.