மேலும் செய்திகள்
பள்ளி வரை பஸ்கள் இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
24-Jul-2025
அரவக்குறிச்சி திருச்சி பாரதிதாசன் பல்கலையில் நடந்த, பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், அரவக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.திருச்சி பாரதிதாசன் பல்கலையில், பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுப்பதில் இளைஞர்களின் பங்கு, என்ற தலைப்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு, மூன்று நாள் பயிற்சி பட்டறை நடந்தது. இதில், கரூர் மாவட்டத்திலிருந்து அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த சுபஸ்ரீ, பவதாரணி, காயத்ரி ஆகிய மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். மாணவி சுபஸ்ரீ சிலம்பம், கிடு கிடு கில்லி, நொண்டி ரிலே மற்றும் கவட்டை போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பரிசுகளை பெற்றார். மாணவி பவதாரணி கயிறு இழுக்கும் போட்டியில் பரிசு பெற்றார். மாணவி காயத்ரி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியரை கல்லுாரி முதல்வர் காளீஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
24-Jul-2025