உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

அரவக்குறிச்சி வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.சுங்கச்சாவடிகளில் செப்., மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழிக்கட்டணம், 110 ரூபாயாக இருந்த நிலையில், 115 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பலமுறை பயண கட்டணம், 165 ரூபாயிலிருந்து, 170 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம், 3,305 ரூபாயிலிருந்து, 3,375 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் மாற்றமில்லை. பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணமான, 290 ரூபாயிலிருந்து, 295 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணமாக, 5,780 ரூபாயிலிருந்து, 5,910 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. டிரக் மற்றும் பஸ்களுக்கான ஒரு வழி கட்டணம், 385 ரூபாயிலிருந்து, 395 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க தற்போதுள்ள கட்டணம், 580 ரூபாயிலிருந்து, 590 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம், 11,560 ரூபாயிலிருந்து, 11,820 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.பல அச்சு வாகனம், ஒருமுறை பயண கட்டணம், 620 ரூபாயிலிருந்து, 635 ரூபாயாகவும், பலமுறை பயண கட்டணம், 930 ரூபாயிலிருந்து, 950 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம், 18,580 ரூபாயிலிருந்து, 18,995 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !