மேலும் செய்திகள்
பள்ளி மாணவ - மாணவியர் கலை திருவிழாவில் அசத்தல்
2 hour(s) ago
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த வட்டார அளவிலான கலைத்திருவிழா நிறைவு பெற்றது.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், குறுவள அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், வட்டார அளவிலான கலைத்திருவிழா அரவக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.கலை, இலக்கியம், இசை, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்ற விழாவில், பல பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்வில் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
2 hour(s) ago