கல்குவாரி துவங்குவது குறித்து பொது மக்களிடம் கருத்து கேட்பு
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக, கல்குவாரி துவங்குவது குறித்து, பொது-மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட கலால் உதவி ஆணையர் கருணாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், குளித்தலை தாசில்தார் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை வட்டம், நாகனுார் கிராமம், நல்லுார் கிராமத்தில், தனியார் நிறுவனத்தினரின் கிரானைட் குவாரி திட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூகஆர்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. குவாரிக்கு பலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.அனைத்து மக்களின் கருத்துகளையும் பதிவு செய்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்-திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு, கோரிக்கைகள் குறித்து நடவ-டிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். முன்னதாக, திட்டங்கள் குறித்து வெண்திரையில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்-பட்டது. தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் விவ-சாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு பிரி-வுகளின் விவசாய சங்க நிர்வாகிகள், பஞ்..தலைவர்கள் கலந்து கொண்டனர்.