உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலையை விட்டு நிறுத்திய மாஜி முதலாளி மீது தாக்குதல்

வேலையை விட்டு நிறுத்திய மாஜி முதலாளி மீது தாக்குதல்

கரூர், கரூரில் வேலையை விட்டு நிறுத்திய, மாஜி முதலாளியை கல்லால் அடித்த, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் அருகே வெங்கமேடு ராதா தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார், 25, டிரைவர். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கரூர் பண்டரிநாதன் கோவில் தெருவை சேர்ந்த கோபால், 47, என்பவரிடம், டிரைவராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில், தினேஷ்குமாரை ஒழுங்கீனம் காரணமாக, டிரைவர் வேலையில் இருந்து கோபால் நிறுத்தி விட்டார். இதனால், ஆத்திரமடைந்த தினேஷ் குமார் கடந்த, 30ம் தேதி மாலை கோபாலை கல்லால் அடித்து மிரட்டல் விடுத்தார். மேலும், டாடா ஏ.சி., வாகனத்தின் கண்ணாடியையும், தினேஷ் குமார் உடைத்துள்ளார்.இதுகுறித்து, கோபால் அளித்த புகார்படி, தினேஷ் குமாரை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை