உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமித்ஷா உருவ பொம்மை எரிக்க முயற்சி: கரூரில் 21 பேர் கைது

அமித்ஷா உருவ பொம்மை எரிக்க முயற்சி: கரூரில் 21 பேர் கைது

கரூர், டிச. 24-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியதை கண்டித்து, கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று, தமிழ்புலிகள் கட்சி சார்பில், அமித்ஷாவின், உருவ பொம்மை எரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு, போலீசார் அனுமதிக்கவில்லை. நேற்று காலை, கரூர் தாலுகா அலுவலகம் முன், அமைச்சர் அமித்ஷாவின், உருவ பொம்மையை எரிக்க முயன்ற, கரூர் மேற்கு மாவட்ட தமிழ் புலி கள் கட்சி செயலாளர் பொன்னுசாமி உள்பட, எட்டு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.அதேபோல், கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா கார்னர் பகுதியில், அமித்ஷாவின் உருவ பொம் மையை எரிக்க முயன்றதாக, தமிழ் புலிகள் கட்சியினர், 13 பேரையும் போலீசார் கைது செய்தனர்.ஆர்ப்பாட்டம்கரூர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் செல்ல முத்து தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அம்பேத்கரை விமர்சனம் செய்து பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், அமித் ஷா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ