மாநில அரசின் நான்காண்டு சாதனை குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம் :லாலாப்பேட்டை அருகில், சிந்தலவாடி பஞ்சாயத்தில், மாநில அரசின் நான்காண்டு கால சாதனை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், லாலாப்பேட்டை சந்தைப்பேட்டை அருகில் நேற்று காலை, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரசின் நான்கு ஆண்டு கால சாதனை பற்றி மக்களுக்கு, விளக்கப் படம் காட்டப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர்களுக்கு இலவச பஸ் வசதி, மாணவ, மாணவியருக்கு காலை உணவு திட்டம், மின்சாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டம், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை, வேளாண்மைத்துறை திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.