மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய நிகழ்ச்சிகள்
16-Nov-2024
கரூர்: ''கரூர் விஷன்-2030 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வரும், 24ல் கரூரில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடக்கிறது,'' என, சி.ஐ.ஐ., (இந்திய தொழில் கூட்டமைப்பு) கரூர் கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.கரூரில், அவர் நிருபர்-களிடம் கூறியதாவது:கரூரில் வரும், 2030ல், 50 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டும் வகையில், பல்வேறு திட்டங்களை செயலாற்றி வருகிறோம். அதற்கு கரூர் விஷன்-2030 என பெய-ரிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும், 24 காலை, 6:00 மணிக்கு கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நடக்க உள்ளது. ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர், சிறுவர், சிறுமியர் என, 9,000 பேர் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு டி-சர்ட், சான்றிதழ், வெற்றி பெறுபவர்-களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை தொடர்ந்து, கரூர் அட்லஸ் கலையரங்கில் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள, 73 சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் பங்கு பெறும், தொழில் சார்ந்த கருத்தரங்கம், கலந்துரையாடல் நடக்கிறது. அதில், சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தெரிவிக்க உள்ளனர். இவ்வாறு கூறினார்.சி.ஐ.ஐ., துணைத் தலைவர் பிரபு, யங் இந்தியன் அசோஷியேஷன் தலைவர் கார்த்திகேயன், துணைத்தலைவர் லோகேஷ் உடனிருந்-தனர்.
16-Nov-2024