வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
கரூர், நவ. 29-அரவக்குறிச்சியில், வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.சிறப்பு துணை ஆணையர் கருப்புசாமி பாண்டியன் தலைமை வகித்தார். வருமான வரி ஆய்வாளர் மீனாட்சி, காணொலி காட்சி மூலம் வருமான வரி நடை முறைகள் பற்றி விளக்கினார். தொடர்ந்து, வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வருமான வரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரி செலுத்துவது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்துள்ள புதிய முயற்சிகள், இணைய வழி (டிஜிட்டல்) செயல்பாடுகள், வரி செலுத்துவதில் ஏற்பட்டுள்ள மேம்பாடு, வரிசெலுத்துவோரின் பங்கு, கடமைகள் குறித்து கூறினர்.கூட்டத்தில், வருமான வரித்துறை திருச்சி ஆய்வாளர்கள் சரவணன், மனோஜ், கார்த்திக், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழக செயலாளர் வெங்கட்ராமன், பாபுலர் அபுதார் வர்த்தக சங்க நிர்வாகி அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.