உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நெல் பயிர்களில் இலை சுருட்டுப்புழு கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு

நெல் பயிர்களில் இலை சுருட்டுப்புழு கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணராயபுரம்:கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடி பயிரானது நடவு நிலையிலும், வளர்ச்சி பருவத்திலும் உள்ளது. நெல் பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. இந்த தாக்குதல் குறைவாக இருக்கும் போது அல்லது தாக்குதல் இல்லாவிட்டாலும், வேப்ப எண்ணெய் அல்லது வேம்பு சார்ந்த மருந்தான அசாடிரக்டின் ஏக்கருக்கு, 500 மி.லி., உடன் ஷாம்பு மூன்று பாக்கெட், திரவம் கலந்து தெளிக்கவும்.இலை சுருட்டுப்புழு தாக்குதல், 100 இலைக்கு 10 இலை மேல் பாதிப்பு இருந்தால் குளோர்பைரிபாஸ், 25 மி.லி., ஓட்டும் திரவம். 0.5 மி.லி., கலந்து தெளிக்கவும். இதன் மூலம் புழு கட்டுப்படுத்தப்படும். மேலும் விவசாயிகளுக்கு தேவையில்லாத கூடுதல் செலவு செய்வது குறைக்க முடியும். பூச்சி தாக்குதல் குறைந்து மகசூல் எடுக்க முடியும். இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !