உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தபால் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

தபால் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கரூர் :கரூர் தலைமை தபால் நிலையம் சார்பில், துாய்மை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை, கரூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தமிழினி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற அஞ்சல் நிலைய ஊழியர்கள், ஏஜன்ட்கள், 'துாய்மை இந்தியா' இயக்கத்தின் செயல்பாடு, திட்டத்தின் நோக்கம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை