மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் தேங்காய் விலை உயர்வு
10-May-2025
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை
16-May-2025
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், வாழை இலையின் விலை குறைந்துள்ளது.கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, மழை காரணமாக வாழை இலையின் தேவை குறைந்துள்ளது. மேலும் முகூர்த்த சீசன் குறைவு ஆகிய காரணங்களால் வாழை இலை விலை உயர்வு இல்லாமல் குறைத்து விற்கப்பட்டது.100 இலை கொண்ட கட்டு ஒன்று கடந்த மாதம், 400 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,'வரும் நாட்களில் வாழை இலைகளின் விலை உயர்வு ஏற்படும். மேலும் முகூர்த்த சீசன் ஆரம்பம் என்பதால், தேவை அதிகரித்து, மீண்டும் விலை உயர்ந்து விற்கப்படும்,' என்றனர்.
10-May-2025
16-May-2025